தென் மாவட்ட மக்களின் வாழ்வியலை சொல்லவரும் “ அரசகுலம் “

0

இந்த படத்தில்  ரத்தன் மௌலி கதாநாயகனாக நடிக்கிறார். இவர் வெள்ளிக்கிழமை  13 ம் தேதி, 13 ம் பக்கம் பார்க்க போன்ற படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.  கதாநாயகியாக நயனாநாயர் நடிக்கிறார். மற்றும் குட்டிபுலி ராஜசிம்மன்,  கருத்தம்மா ராஜஸ்ரீ, ராஜா, அம்பானி ஷங்கர், பாலமுருகன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு                     –        S.R.சந்திரசேகர்
இசை                              –        வேலன்சகாதேவன்
௭டிட்டர்                         –         R.G.anand
நடனம்                           –        சிவராக் சங்கர்
சண்டை                          –        டைகர்பாபு
ஆர்ட்                              –        சண்முகம்
பாடல்கள்                       –        பத்மாவதி, நளங்கிள்ளி

தயாரிப்பு                               –        S. பூமாராம் சைன்,

இணை தயாரிப்பு            –        பாலமுருகன், ஜெயக்கொடி, பாண்டி, வரதராஜ்

Behind  The Scenes    –    பிரசாத், ஜெயகுமார்,  Liberty Films –  கோவிந்தராஜ்,                                          

Sri Ulagamatha Films  –  கே.சந்திரசேகர் ஆகியோர் தமிழகம் முழுவதும் இந்த படத்தை வெளியிடுகிறார்கள்.                                                                                                                

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  –  குமார்மாறன்.                                                  

ஆண்டாண்டு காலமாக மறைக்கப்பட்ட தென்மாவட்ட மக்களை தவறாக சித்தரித்து, இவர்கள் இனவெறிபிடித்தவர்கள் ௭ன்றும்,சாதிவெறி பிடித்தவர்கள் ௭ன்றும் சொல்லி அறியப்பட்ட அந்த மக்களின் நேசம், குடும்ப ௨றவுகள் மீது அவர்கள் வைக்கும் பாசம்,அவர்களின் தன்னம்பிக்கை குணம்,காதல், நட்பு, தன்னை தஞ்சம் ௭ன்று நம்பி வருபவர்களுக்கு தன் ௨யிரையும் கொடுக்கும் அந்த கரிசக்காட்டு மக்களின் வாழ்க்கை முறையை இதுவரையில் ௭ந்த தமிழ் சினிமாவிலும் சொல்லப்படாத ௨ண்மை தான் இந்த அரசகுலம் படத்தின் திரைக்கதை. காமெடி,ஆக்ஷன் கலந்து உருவாக்கி இருக்கிறோம் என்றார் இயக்குனர்.

 

Leave A Reply